ஜெகன் அண்ணா காலனி வீடு கட்டுமான பணிகளை 90 நாட்களுக்குள் முடிக்க வேண்டும்-அதிகாரிகளுக்கு எம்எல்ஏ உத்தரவு

திருப்பதி :  ஜெகன் அண்ணா காலனி வீடு கட்டுமான பணிகள் 90 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு எம்எல்ஏ பாஸ்கர் உத்தரவிட்டார்.

திருப்பதி நகர்புற வளர்ச்சி கழக அலுவலகத்தில் ஜெகன் அண்ணா காலனி வீடு கட்டுமான பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்றுமுன்தினம் நடந்தது. சந்திரகிரி தொகுதி எம்எல்ஏ பாஸ்கர் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் எம்எல்ஏ பாஸ்கர் பேசுகையில், `ஏழை மக்களின் சொந்த வீடு கனவை நனவாக்க முதல்வர் ஜெகன் மோகன் ஜெகன் அண்ணா காலனி திட்டத்தை கொண்டு வந்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த திட்டத்தை சிறப்பாக முடித்து ஏழை மக்களின் முகத்தில் சந்தோஷத்தை காண வேண்டும் என்ற குறிக்கோளோடு செயல்பட்டு வருகிறார். அவரின் இந்த சிறப்பான திட்டத்தை பூர்த்தி செய்யும் விதமாக நாம் அனைவரும் பணியாற்ற வேண்டும்.

ஜெகன் அண்ணா காலனி திட்டத்தில் நடந்து வரும் வீடு கட்டும் பணிகள் போர்க்கால அடிப்படையில் தரமாக 90 நாட்களுக்குள் முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆயிரம் வீடுகளுக்கு ஒரு சிறப்பு அதிகாரிகள் குழு ஏற்படுத்தி அவர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் இருக்க வேண்டும்.

ஜெகன் அண்ணா காலனி வீடு கட்டுமான பணிகளுக்கு சந்திரகிரி மண்டல சிறப்பு அதிகாரியாக திருப்பதி ஆர்டிஓ கனக நரசன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது ஆலோசனையில் அனைத்து துறை அதிகாரிகளும் செயல்பட்டு பணியை சிறப்பாக முடிக்க வேண்டும். ஜெகன் அண்ணா காலனியில் அகலமான சாலைகள் மின்சார வசதி குடிநீர் வசதி சாலை விளக்குகள் பூங்காக்கள் சமுதாயக் கூடங்கள் விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய பசுமையான பகுதியாக இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Related Stories: