மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி டெல்லி பயணம்... பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கத் திட்டம்

கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் ஹாட்ரிக் வெற்றியை ருசித்த மமதா பேனர்ஜி, அதே உற்சாகத்தில் தேசிய அரசியலில் பாஜகவிற்கு எதிராக எதிர்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியை முன்னெடுத்துள்ளார். இதற்காக அவரிடம் உள்ள திட்டம் என்ன, பிற எதிர்க்கட்சிகளின் பதில் என்ன என்பதை பார்க்கலாம். மேற்கு வங்கத்தில் பெற்ற ஹாட்ரிக் வெற்றி அதுவும் பாஜகவை நேருக்கு நேர் சந்தித்து வீழ்த்தியதால் கிடைத்த உற்சாகம், மம்தா பேனர்ஜியை தேசிய அரசியல் பக்கம் நகர்த்தியுள்ளது. சொந்த மாநிலத்தில் மோடியா மம்தாவா என்ற கோதாவில் வென்று காட்டிய அவர், தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியை தொடங்கியுள்ளார்.

இதற்காக அவர் இன்று தலைநகர் டெல்லி செல்லும் மம்தா பேனர்ஜி, அங்கு 5 நாட்கள் தங்கி முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்களை சந்திக்கிறார். இது 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான திட்டங்கள் தான் என்பதை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் உறுதிப்படுத்தி உள்ளது. முக்கிய தலைவர்களை மம்தா பேனர்ஜி சந்திப்பதற்கான முன்னேற்பாடுகளை திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் பேனர்ஜியும் திட்டமிடல்களை வியூக தொகுப்பாளர் பிரசாந்த் கிஷோரும் ஏற்கனவே கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி, சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை சந்திக்க மம்தா திட்டமிட்டுள்ளார்.குறிப்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடனான அவரது சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது

Related Stories:

>