×

பூண்டி ஒன்றிய குழு கூட்டம் ரூ.2.75 கோடியில் திட்டப்பணிகள்: தீர்மானங்கள் நிறைவேற்றம்

திருவள்ளூர்: பூண்டி ஒன்றிய குழு கூட்டத்தில், ரூ.2.75 கோடியில் திட்டப்பணிகளை முடிக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பூண்டி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய பெருந்தலைவர் பி.வெங்கட்ரமணா தலைமையில் நடந்தது. துணை பெருந்தலைவர் மகாலட்சுமி மோதிலால், ஒன்றிய ஆணையர் சேகர், மேலாளர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட கவுன்சிலர் கே.யு.சிவசங்கரி உதயகுமார், கோ.சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டனர். கொரோனா தொற்றால் உயிரிழந்த மாம்பாக்கம் ஒன்றிய கவுன்சிலர் குமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து முன்னாள் முதல்வர் கலைஞரின் படத்தை மலர்களால் அலங்கரித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்ந்து, ஒன்றியக்குழு மன்றக் கூட்டத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தை பொருத்தினர். பின்னர், முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின், பால்வளத்துறை அமைச்சராக பதவியேற்ற ஆவடி சா.மு.நாசர், திருவள்ளூர் தொகுதியில் 2வது முறையாக வெற்றி பெற்ற வி.ஜி.ராஜேந்திரன், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவாக வெற்றி பெற்ற டி.ஜே.கோவிந்தராஜன் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  

மேலும் ஒவ்வொரு ஒன்றிய கவுன்சிலர் பகுதியிலும் வளர்ச்சி பணிகளை நிறைவேற்ற ஒன்றிய பொது நிதியில் இருந்து தலா ரூ.8 லட்சம் வீதம் 18 ஒன்றிய கவுன்சிலர்களர்களுக்கும் ரூ.2 கோடியே 2 லட்சத்து 4 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 15வது நிதிக்குழு மானியம் ரூ.73 லட்சத்து 31 ஆயிரத்தில் 18 ஒன்றிய கவுன்சிலர்கள் பகுதியிலும் திட்டப்பணிகளை நிறைவேற்ற வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் பேபி பாலாஜி, ஆர்.பிரசாந்தி ரவி, ஏ.தேன்மொழி ஏழுமலை, வி.மணி, எம்.பாலாஜி, வி.சண்முகம், ஜி.யசோதா கோவிந்தசாமி, எஸ்.ஞானமுத்து, ஏ.வெங்கடேசன், வி.விஜி, பா.பிரபாவதி பாலாஜி, பா.சுபாஷினி பாஸ்கர், சுலோச்சனா மோகன்ராவ், ரெஜீலாமோசஸ், மஞ்சு லிங்கேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Burundi Union Committee , Boondi Union Committee Meeting, Projects, Resolutions
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை