×

புனேயிலிருந்து 17,40,000 டோஸ் கோவிஷீல்டு சென்னை வந்தது

சென்னை:  ஒன்றிய சுகாதாரத்துறை தமிழகத்திற்கு நேற்று, மகராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஒன்றிய மருந்து கிடங்கிலிருந்து 17,40,000 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை விடுவித்தது. இந்த 145 பார்சல் தடுப்பூசிகளை பயணிகள் விமானத்தில் சென்னைக்கு கொண்டு வரமுடியாததால், ஸ்பைஜெட் சரக்கு விமானத்தில் ஏற்றப்பட்டன. இந்த விமானம் புனேவிலிருந்து சென்னைக்கு நேற்று மாலை வந்தது. உடனடியாக இவை தமிழ்நாடு அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. தமிழ்நாட்டிற்கு ஒரே விமானத்தில் 17,40,000 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்திருப்பது இதுவே முதல்முறை.

Tags : Gowishfield ,Pooke ,Chennai , Pune, Govshield, Chennai
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...