×

முறைகேடுகள் குறித்து தொடர்ந்து புகார் வருவதால் பல்வேறு ஒப்பந்தங்கள் ரத்து செய்ய வாய்ப்பு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: பல்வேறு துறைகளில் முறைகேடுகள் குறித்து தொடர்ந்து புகார் வந்து கொண்டெ இருப்பதால் விசாரணை செய்து பல்வேறு துறைகளின் ஒப்பந்தங்கள் ரத்து செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு சென்னை மாநகராட்சியில் வழங்கப்பட்ட ஒப்பந்தங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்ேட இருந்தது. அதன் அடிப்படையில் பல்வேறு சாலைகளில் மாநகராட்சி ஆணையரை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் தேர்தலுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்தும் சாலைகளில் தரம் குறித்தும் துணை ஆணையர்கள் மற்றும் என்ஜினியர்கள் ஆய்வு ெசய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டார்.

இந்த ஆய்வில் 3,200 சாலைகள் புனரமைக்க ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக பஸ் செல்லாத சாலைகள், ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் பராமரிப்பு பணி மேற்கொண்டால் போதும் என்ற அளவில் உள்ள சாலைகள் மற்றும் தரத்துடன் உள்ள நல்ல சாலைகளை மறுசீரமைக்க முறைகேடாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதற்கு மத்திய மாநில அரசின் வளர்ச்சி நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 660 சாலைகள் மறுசீரமைப்பதில் உள்ள முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தங்களை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநகராட்சிக்கு ரூ.43 கோடி இழப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டுள்ளது.

அதைப்போன்று மழைநீர் வடிகால் சீரமைப்பும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதிலும் முறைகேடு நடந்து இருப்பதாக புகார்கள் வந்துள்ளன. அவற்றையும் தர ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட் முறைகேடுகள் குறித்து தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த புகாரை மாநகராட்சி ஆணையர் மற்றும் உயர் அதிகாரிகள் நேரடியாக விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி பல்வேறு துறைகளின் முறைகேடு நடந்திருக்கும் ஒப்பந்தங்கள் அனைத்தும் ரத்து செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும் பட்சத்தில் மாநகராட்சிக்கு ஏற்படும் பல கோடி ரூபாய் இழப்பு தடுக்கப்படும்.

Tags : Chennai Corporation , Irregularities, complaint, cancellation of contracts, Chennai Corporation
× RELATED திருவான்மியூர் கடற்கரையில் வானில்...