×

ராமதாசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து

சென்னை: பாமக நிறுவனர் ராமதாசின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா ச.ராமதாசுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். இட ஒதுக்கீடு உள்ளிட்ட அரசியல் உரிமைகளுக்காக போராடியும், வாதாடியும் வரும் அவர் நீண்ட காலம் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன். இவ்வாறு பதிவிட்டுள்ளார். இதேபோல், பாமக நிறுவனர் ராமதாசை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.

Tags : Chief Minister ,MK Stalin , Ramadas, Chief Minister MK Stalin, congratulations
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...