வெற்றியுடன் தொடங்கினார் சிந்து: மகளிர் பேட்மின்டன்

டோக்கியோ: நடப்பு உலக சாம்பியனான சிந்து (26 வயது, 6வது ரேங்க்), டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஜே பிரிவு முதல் சுற்றில் இஸ்ரேல் வீராங்கனை செனியா பொலிகர்போவாவுடன் (31 வயது, 58வது ரேங்க்) நேற்று மோதினார். ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் பிறந்த பொலிகர்போவா தற்போது இஸ்ரேல் நாட்டுக்காக விளையாடுவது குறிப்பிடத்தக்கது. தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த சிந்து 21-7 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். 2வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய அவர் 21-7, 21-10 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தி அசத்தினார். இப்போட்டி 28 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. ஜே பிரிவில் சிந்து அடுத்ததாக ஹாங்காங் வீராங்கனை செயுங் கான் யி (34வது ரேங்க்) சவாலை சந்திக்கிறார்.

Related Stories:

>