எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இல்லை: கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில், மாற்று கட்சியினர் காங்கிரசில் இணையும் விழா நேற்று நடந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். ஈரோடு மாவட்ட தமாகா தலைவர் சச்சிதானந்தம் தலைமையில் பலர் இணைந்தனர். விழாவில் ஏ.செல்லக்குமார் எம்பி, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, பொதுச்செயலாளர்கள் எஸ்.காண்டீபன், எஸ்.ஏ.வாசு, மாவட்ட தலைவர்கள் எம்.பி.ரஞ்சன்குமார், சிவராஜசேகரன் மற்றும் கொட்டிவாக்கம் முருகன் பங்கேற்றனர். பின்னர் கே.எஸ்.அழகிரி கூறுகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினரின் சோதனை நடந்தது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இல்லை என்றார்.

Related Stories:

>