மன்னார்குடி அருகே கருப்பு பூஞ்சை நோய்க்கு சசிகலா உறவினர் உயிரிழப்பு

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே பெருக வாழ்ந்தான் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (60). கோட்டூர் தெற்கு ஒன்றிய அமமுக ஒன்றிய செயலாளர். கோட்டூர் ஒன்றியக்குழு தலைவராகவும் இருந்தார். இவர், சசிகலாவின் அண்ணன் ஜெயராமனின் மனைவியான இளவரசியின் உடன் பிறந்த சகோதரர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அண்ணாதுரை, தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மே 15ம்தேதி அனுமதிக்கப்பட்டார். ஒரு மாத சிகிச்சைக்கு பின் குணமான நிலையில், அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சசிகலா ஏற்பாட்டின் பேரில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதம் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஒரு மாதத்திற்கு மேல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை அண்ணாதுரை உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல், சொந்த ஊருக்கு ஆம்புலன்சில் நேற்று மதியம் 3 மணியளவில் கொண்டு வரப்பட்டது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின் மாலை 6 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.

Related Stories:

>