புதுவையில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு: 7 குழந்தைகள் சிகிச்சைக்கு அனுமதி

புதுச்சேரி: புதுவையில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரி மாநிலத்தில் 5,950 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 104 பேருக்கு கொரோனா உறுதியானது. கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் உள்ள குழந்தைகளுக்கான கோவிட் வார்டில் 5 வயதுக்கு உட்பட்ட 3 குழந்தைகள், 5 வயதுக்கு மேற்பட்ட 2 குழந்தைகள், தொற்று உறுதி செய்யப்பட்ட தாயுடன் ஒரு குழந்தை, தொற்று அறிகுறியுடன் ஒரு குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது. 58 வயது பெண் ஜிப்மரிலும், 40 வயது ஆண் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,789 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 6,76,356 பேருக்கு (2வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Related Stories: