ராமப்பா கோயில் பாரம்பரிய சின்னம்: யுனெஸ்கோ அறிவிப்பு

புதுடெல்லி: ஐநா.வின் துணை அமைப்பான யுனெஸ்கோ, பாரம்பரிய சின்னங்களை பாதுகாப்பதற்கான முயற்சிகளை உலகளவில் மேற்கொண்டு வருகிறது. பாரம்பரியச் சின்னங்களை தனது பட்டியலில் சேர்ப்பதன் மூலம், அதற்கு சர்வதேச கவனத்தையும் பெற்று தருகிறது. தமிழகத்தில் மாமல்லபுரம், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயம், ஊட்டி ரயில் பாதை போன்ற பலவற்றை அது பாரம்பரிய சின்னங்களாக அறிவித்துள்ளது. இந்நிலையில், தெலங்கானா மாநிலத்தில் உள்ள ராமப்பா கோயிலை பாரம்பரியச் சின்னங்களில் இணைப்பதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த சிவன் கோயில், வாராங்கல் மாவட்டத்தில் பலம்பேட் என்ற பகுதியில் அமைந்துள்ளது. யுனெஸ்கோ அறிவிப்பைத் தொடர்ந்து, தெலங்கானா மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அனைவரும் ராமப்பா கோயிலை சென்று அழகை தரிசிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories:

More
>