காஞ்சிபுரம் எல்ஐசி கிளை அலுவலகத்தில் புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் அறிமுக விழா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் எல்ஐசி கிளை அலுவலகத்தில், புதிய மருத்துவக் காப்பீடு திட்ட அறிமுக விழா நடந்தது. எல்ஐசி நிறுவனம் ‘ஆரோக்ய ரக்ஷக்’ என்ற புதிய மருத்துவக் காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், மருத்துவ செலவுகளை ஈடு செய்துகொள்ளலாம். பிறந்து, 91 நாட்கள் ஆன குழந்தை முதல், 80 வயது முதியோர் வரை மருத்துவ காப்பீடு கொடுக்கும். பாலிசி எடுத்த தேதி முதல் 80 வயது வரை கட்டக்கூடிய பிரீமியம் மாற்றம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம் எல்ஐசி அலுவலகத்தில் ‘ஆரோக்ய ரக்ஷக்’ மருத்துவ காப்பீடு திட்டம் அறிமுக விழா நேற்று நடந்தது. காஞ்சிபுரம் எல்.ஐ.சி கிளை மேலாளர். விஜயகுமார் தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி புதிய பாலிசியை அறிமுகம் செய்து வைத்தார்.

Related Stories:

>