போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம்,நெய்யாடுபாக்கம் கிராமம், வன்னியர்தெரு பகுதியை சேர்ந்த சித்திரை செல்வன். இவர், கடந்த சில மாதங்களுக்கு முன், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் வழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர், காஞ்சிபுரம் தாலுகா போலீசில் புகார் அளித்தனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சித்திரைச் செல்வனை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories:

More
>