‘லைப் பார்ட்னரை’ தேர்வு செய்வது எப்படி?.. ஒன்றிய பெண் அமைச்சர் கூறிய யோசனை வைரல்

புதுடெல்லி: திருமணம் செய்து கொள்ள சரியான ஜோடியை எப்படி தேர்வு செய்வது என்பது குறித்து ஒன்றிய பெண் அமைச்சர் கூறிய யோசனை வைரலாகி வருகிறது. ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவ்வப்போது நகைச்சுவையான பதிவுகளை பதிவிடுவார். தற்போது அவர் வெளியிட்ட பதிவில், ‘கடின உழைப்புக்கு மாற்று இல்லை’ என்ற உண்மையை தெரிவித்திருந்தார். அமெரிக்க நடிகர் ஒருவர் கூறிய மேற்கோளை சுட்டிக் காட்டி, இந்த கருத்தை ஸ்மிருதி பகிர்ந்து கொண்டார். அதில், ‘நீங்கள் (திருமணமம் செய்து கொள்ள விரும்புவோர்) ஒரு நபரை திருமணம் செய்வதற்கு முன்பு, அவர்கள் உண்மையில் யார் என்பதைக் காண மிகவும் ஸ்லோவான இன்டர்நெட் சேவையுடன் கூடிய கம்ப்யூட்டரை பயன்படுத்துமாறு கூற வேண்டும்‘ என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு நெட்டிசன்கள் வேடிக்கையான கமென்டன்ஸ்களை ஷேர் செய்து வருகின்றனர். மேலும், ஸ்மிருதியில் கருத்து உண்மை தான் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறுமிகளுக்கு ‘பறக்க சிறகுகளைக் கொடுங்கள்’ என்ற அருமையான செய்தியுடன் கூடிய அனிமேஷன் வீடியோ ஒன்றை ஷேர் செய்திருந்தார். அரசியலில் நுழைவதற்கு முன்பு பேஷன் உலகில் மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஸ்மிருதி, கடந்த 1998ல் மிஸ் இந்தியா அழகுப் போட்டியில் பங்கேற்றார். சினிமாவில் சில படங்களில் நடித்த அவர், ஜூபின் இரானி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவர்களுக்கு சோயிஷ் இரானி மற்றும் ஜோஹர் இரானி என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர. கடந்த 2003ல் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய ஸ்மிருதி தற்போது பிரதமர் மோடியின் அமைச்சரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சராகவும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>