கும்மிடிப்பூண்டி அருகே ஷட்டர் உடைத்து டாஸ்மாக் கடையில் மதுபாட்டில் கொள்ளை முயற்சி

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க முயன்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பல்லவாடா கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. மேற்பார்வையாளராக கண்ணம்பாக்கம் பகுதியை சேர்ந்த ராமநாதன் (42) உள்ளார். விற்பனையாளர்களாக  கிருஷ்ணன் (50), துரை(45), திருநாவுக்கரசு (49) ஆகியோர்  பணியாற்றி வருகின்றனர். நேற்றிரவு வியாபாரம் முடித்துவிட்டு டாஸ்மாக் கடையை பூட்டிவிட்டு சென்றனர்.

இன்று அதிகாலை அவ்வழியாக சென்றவர்கள், டாஸ்மாக் கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டிருப்பது பார்த்தனர். இதுகுறித்து பாதிரிவேடு போலீசாருக்கும் மேற்பார்வையாளர் ராமநாதனுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். ஷட்டரை வெட்டி கொள்ளையடிக்க முயற்சி நடந்திருப்பது தெரிந்தது.  ஆனால் மதுபாட்டில்கள் எதுவும் கொள்ளையடிக்கப்படவில்லை என்று மேற்பார்வையாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரின்படி, பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக்கில் கொள்ளையடிக்க முயன்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories:

>