ஆஸி.க்கு எதிராக 2வது ஒன்டே: 4 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

பிரிட்ஜ்டவுன்: வெஸ்ட்இண்டீஸ்-ஆஸ்திரேலியா இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல்போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது. 2வது போட்டி நேற்று முன்தினம் நடைபெற இருந்த நிலையில், வெ.இண்டீஸ் அணி ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் ஒத்திவைக்கப்பட்டது. இன்று அந்த போட்டி நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 47.1 ஓவரில் 187 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது.

அதிகபட்சமாக வெஸ் அகர் 41 ரன் எடுத்தார். பின்னர் களம் இறங்கிய  வெஸ்ட் இண்டீஸ் 38 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. நிக்கோலஸ் பூரன் நாட்அவுட்டாக 59 ரன் எடுத்து ஆட்டநாயகன் விருது பெற்றார். கடைசி போட்டி நாளை மறுநாள் நடக்கிறது.

Related Stories:

>