வாக்காளர்களுக்கு பணம் அளித்த குற்றச்சாட்டு: தெலுங்கானா ராஷ்ட்ரிய சமீதி கட்சியின் எம்.பி மாலோத் கவிதாவிற்கு 6 மாதம் சிறை தண்டனை

தெலுங்கானா: வாக்காளர்களுக்கு பணம் அளித்த குற்றச்சாட்டில் தெலுங்கானா எம்.பிக்கு 6 மாதம் சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019- ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் போது, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமீதி கட்சியின் எம்.பி மாலோத் கவிதாவிற்கு 6 மாதம் சிறை தண்டனை அளித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எம்.பி மாலோத் கவிதாவின் உதவியாளருக்கும் 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டது.  அதேநேரத்தில், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்காக ஜாமீன் வழங்கி உள்ளது. தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியைச் சோ்ந்தவா் மாலோத் கவிதா. 

இவா் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் தெலங்கானா மாநிலம் மெஹபூபாபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் தோ்தலின்போது மாலோத் கவிதாவுக்கு வாக்களிக்குமாறு பத்ராத்ரி-கொத்தகூடம் மாவட்டத்தில் டிஆா்எஸ் கட்சித் தொண்டா் ஒருவா் பொதுமக்களுக்குப் பணம் அளித்தார். அவரை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனா். இதையடுத்து, வாக்களிக்க பணம் அளிக்கப்பட்டது தொடா்பாக மாலோத் கவிதா மற்றும் அந்தத் தொண்டா் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்தனா். தோ்தலில் மாலோத் கவிதா வெற்றி பெற்றதையடுத்து அந்த வழக்கு ஹைதராபாதில் உள்ள எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

Related Stories: