×

நீலகிரியில் ஆட்டோ ஆம்புலன்ஸ் திட்டத்தை தொடங்கிய ராதிகா சாஸ்திரி: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டி பேச்சு

டெல்லி: டோக்கியோ ஒலிம்பிக்கில் மூவர்ணக் கொடியை ஏந்தி இந்திய வீரர்கள் வலம் வந்தது பரவச உணர்வை ஏற்படுத்தியது என்று 79-வது மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். 2011ம் ஆண்டுக்கு பிறகு காதியில் விற்பனை பெருமளவு அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:  டோக்கியோ ஒலிம்பிக்கில் மூவர்ணக் கொடியை  ஏந்தி இந்திய வீரர்கள் வலம் வந்தது பரவசத்தை ஏற்படுத்தியது. ஊரகப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி ஆடைகளை வாங்கி அணிய வேண்டும்.

வெள்ளையனே வெளியேறு என போராட்டம் நடந்ததை போல் இந்தியாவை ஒருங்கிணைப்போம் என செயல்படுவோம். லைட் ஹவுஸ் என்னும் தொழில்நுட்பம் மூலம் குறைந்த செலவில் மிக விரைவாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. குன்னூரில் ஆட்டோ ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தியுள்ள ராதிகா என்பவர் பற்றியும் பிரதமர் மோடி பேசினார். ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையால் மலைப் பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு உதவி கிடைக்கிறது.


Tags : Radhika Shastri ,Nilgiris ,Narendra Modi ,Mann Ki Baat , Radhika Shastri launches auto ambulance project in Nilgiris: PM Modi praises Mann Ki Baat
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...