ஸ்ரீராமபுரம் பேரூராட்சியில் இடிந்து விழும் அபாயத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டி

சின்னாளபட்டி: ஸ்ரீராமபுரம் பேரூராட்சி கட்டயகவுண்டனூரில் இடிந்துவிழும் நிலையில் மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் ஸ்ரீராமபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கட்டயகவுண்டனூரில் 400க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய மேல்நிலை தொட்டி உள்து. இந்த தொட்டியின் நான்கு தூண்களும சேதமடைந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகிறது. மேலும் தொட்டியின் மேற்கூரை பெயர்ந்து அடிக்கடி காற்று அடிக்கும் போதும் மழையின் போதும் கீழே விழுவதால் அப்பகுதியை கடந்து செல்வோர் உயிர் பயத்தில் உள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ராஜலிங்கம் கூறுகையில், கடந்த 5 வருடங்களாகவே மேல்நிலை குடிநீர் தொட்டி தொடர்ந்து சேதமடைந்து வருகிறது. மேற்கூரை அடிக்கடி பெயர்ந்து கான்கிரீட் கலவை கீழே விழுகிறது. பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் நடவடிக்கையும் இல்லை. இது தொடர்பாக பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்துள்ளோம். செயல் அலுவலர் சந்தனம்மாள் மேல்நிலை குடிநீர் தொட்டியை ஆய்வு செய்து விரைவில் புதுப்பித்து தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார் என்றார்.

Related Stories:

More
>