பேரவை கூட்டத்தொடர் முடித்துவைப்பு

சென்னை: 16வது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடர் மே 11ல் தொடங்கியது. சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள், எம்எல்ஏவாக பதவி ஏற்றனர். மே 12ல் சபாநாயகராக அப்பாவு தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து ஜூன் 21ம் தேதி  சட்டப் பேரவையில் கவர்னர் உரை நிகழ்த்தினார். கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்எல்ஏக்கள் விவாதித்தனர். அந்தத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு உள்ளிட்ட நிகழ்வுகள் ஜூன் 24ம் தேதி வரை நடைபெற்றது. அதை தொடர்ந்து கூட்டத் தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு சட்டசபையின் செயலாளர் சீனிவாசன்  நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘கடந்த 11.5.2021 அன்று சட்டசபையின் முதலாவது கூட்டத் தொடர் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரை இந்திய அரசியல் சாசனத்தின் 174(2) (ஏ) ஷரத்தின்படி, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இறுதி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்’ என கூறியுள்ளார்.

Related Stories:

>