சுகாதாரம், கல்வித் துறைகளின் வளர்ச்சி மிகவும் குறைவு மிகப்பெரிய நெருக்கடியில் இந்திய பொருளாதாரம்: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கவலை

புதுடெல்லி: இந்திய பொருளாதாரம் மிகப்பெரிய நெருக்கடியில் உள்ளதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கவலை தெரிவித்துள்ளார். இந்திய பொருளாதார வளர்ச்சிக்காக கடந்த 1991, ஜூலை 24ம் தேதி பொருளாதார தாராளமய கொள்கையை அப்போதை காங்கிரஸ் கூட்டணி அரசு அமல்படுத்தியது. அப்போது, நரசிம்மராவ் பிரதமராக இருந்தார். அவருடைய அமைச்சரவையில் மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்தார். இந்த கொள்கை அமல்படுத்தப்பட்டு நேற்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கொரோனாவால் சமீப காலமாக,  இந்தியா  மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்பட்டு இருப்பதைக் கண்டு மிகவும்  வருத்தம் அடைகிறேன். இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்துடன்  ஒப்பிடும் போது, சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளின் வளர்ச்சி மிகவும்  குறைவாகவே இருக்கிறது. அதன் காரணமாக, நாம் ஏராளமான உயிர்களை  இழந்துவிட்டோம். தற்போதைய பொருளாதார சூழலில், 1991 நெருக்கடி காலகட்டத்தை விடவும், வளர்ச்சியை நோக்கி முன்னேறும் நமது பாதையானது மிகவும் மோசமாக இருக்கிறது. ஒவ்வொரு இந்தியருக்கும் ஆரோக்கியமான மற்றும் கண்ணியமான வாழ்க்கை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதற்கு, நம்முடைய முன்னுரிமைகள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories:

>