ஜம்மு காஷ்மீர், லடாக்கில் ஜனாதிபதி 4 நாள் பயணம்

புதுடெல்லி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று முதல் 28ம் தேதி வரையில் ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களில் பயணம் செய்கிறார். இது குறித்து ஜனாதிபதி மாளிகை நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘ஜூலை 25 முதல் 28ம் தேதி வரை ஜம்மு காஷ்மீர்,  லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு அரசு முறை பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் செல்கிறார். வரும் திங்கட்கிழமை  கார்கில் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார். லடாக்கின் டிராஸ் நகரில் அமைக்கப்பட்டுள்ள கார்கில் வீரர்கள் நினைவிடத்தில் 22ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். 27ம் தேதி நகரில் உள்ள காஷ்மீர் பல்கலைக் கழகத்தின் 19ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>