கோயில் திருவிழாவில் பரிதாபம் ஜெனரேட்டர் புகையால் மூச்சுத்திணறி 2 பேர் பலி

ஊட்டி:  கோயில் திருவிழாவில் ஜெனரேட்டர் புகையால் மூச்சுத்திணறி 2 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். ஊட்டி அருகே சோலூர் பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் ஒசகேரி என்ற இடத்தில் உள்ள சிவன் கோயிலில் தெவ்வபண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடினர். இதில் பங்கேற்ற கோட்டட்டி கிராமத்தை சேர்ந்த சுபாஷ் (36), கீழ் தட்டணேரி மூர்த்தி (49), பேக்கடை அஜித்குமார் (25), ரதீஷ் (21), பிக்ககண்டி விக்னேஷ் (27) ஆகிய 5 பேர் அங்குள்ள அறையில் இரவு தங்கினர்.  அப்போது சோலூர் பகுதியில் காற்றுடன் மழை பெய்து மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.

இதனால் இரவு முழுவதும் ஜெனரேட்டர் இயங்கியது. புகையால் மூச்சு திணறி 5 பேரும் மயக்கமடைந்தனர். நேற்று அதிகாலை அருகில் உள்ள அறையில் தங்கியிருந்த சிலர் கதவை உடைத்து அவர்களை மீட்டு ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சுபாஷ், மூர்த்தி ஆகியோர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மற்ற 3 பேரும் ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related Stories:

>