பாஜ மாநில தலைவர் அண்ணாமலை உறுதி ஒன்றிய அரசு கூடுதலாகவே தமிழகத்துக்கு தடுப்பூசி வழங்கும்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நேற்று நடந்த பாஜ நிர்வாகிகள் கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். முன்னதாக, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அவர் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது, அண்ணாமலை அளித்த பேட்டி:

ஆன்மிகத்தை அடிப்படையாக வைத்து பாஜ கட்சி வளர்ந்து வருகிறது. அண்ணாமலையார் கோயிலுக்கு யானை பெற்றுத்தருவதற்கு பாஜ குரல் கொடுக்கும். ஒன்றிய அரசு தமிழகத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட கூடுதலாகவே கொரோனா தடுப்பூசிகளை வழங்கி வருகிறது.

ஜூன் மாதத்தில் 41 லட்சம் தடுப்பூசி தருவதாக தெரிவித்து, 52 லட்சம் வழங்கியிருக்கிறது. தற்ேபாது 70 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை தருவதாக தெரிவித்துள்ளனர். அதைவிட கூடுதலாகவே தருவார்கள். பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு கட்டுக்குள் கொண்டுவர வேலை செய்து வருகிறது. நாங்களும் பெட்ேரால் டீசல், காஸ் பயன்படுத்துகிறோம். எனவே, மக்களுக்கு இருக்கிற வலி எங்களுக்கும் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>