×

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய உள்ளாட்சி பதவிகளுக்கு இனச்சுழற்சி முறையில் மாற்றம்: நெல்லையில் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

நெல்லை: தமிழகத்தில்  மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு  தேர்தலுக்கு முன்பாக இனச்சுழற்சி முறையில் மாற்றம் கொண்டு வரப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். தூத்துக்குடி,  நெல்லை மாவட்டங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் நடந்து வரும்  வளர்ச்சி பணிகளை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று ஆய்வு  செய்தார். மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உடன் சென்றார். பின்னர் அமைச்சர் கே.என்.நேரு அளித்த பேட்டி: ஒன்றிய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின்  கீழ்  ஊரகப் பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதற்காக ரூ.3951 கோடி  வழங்கப்பட்டது. இதில் 65 சதவீதம் ஊரகப்பகுதிகளுக்கும்,  35 சதவீதம்  நகரப்பகுதிகளுக்கும் செலவிடப்படுகிறது. நகர்ப்புற பகுதிகளுக்கு ஒன்றிய அரசு  அறிவிக்கும்போது வீடுகள் தோறும்  இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தை  பொறுத்தவரை 15 சிறந்த நகரங்கள் உருவாக்கப்படும் என்று திமுக தேர்தல்  அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நகரங்களை முதல்வர் முடிவு செய்து அறிவித்ததும்  அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.  மாநகராட்சிகளை  பொறுத்தவரை எல்லைகளை விரிவுபடுத்துவதற்காக பல நகரங்கள், கிராமங்களை  இணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அப்போது புதிய மாநகராட்சிகளும்,  நகராட்சிகளும் உருவாக்கப்படும். அது தொடர்பாக சட்டமன்ற கூட்டத் தொடரில் மானியக்  கோரிக்கையின்  போது முதல்வர் அறிவிப்பார்.

நகராட்சிகள்,  மாநகராட்சிகள் புதிதாக உருவாக்கப்பட உள்ளதால் நகர்ப்புற உள்ளாட்சிகளான  பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தலுக்கு முன்பாக இனச்சுழற்சி  முறையில் மாற்றம் கொண்டு வரப்படும். செப்.15ம் தேதிக்குள்  தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் நடத்தி  முடிக்கப்படும். அதற்கு பின்னர் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல்  நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Tamil Nadu ,Minister ,K.P. My. Nehru , Corporation, Municipality, Municipality, Ethnic System, Minister KN Nehru
× RELATED தென்காசியில் திமுக வேட்பாளர் ராணி...