தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை பெற்றுத்தர தமிழக அரசு சார்பில் சிறப்பு குழு: அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்

மதுரை:  இலங்கை அகதிகளுக்கு சட்டரீதியாக இந்திய குடியுரிமை பெற்று தர தமிழக அரசின் சார்பில் சிறப்புக்குழு அமைக்கப்படுமென அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.  சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மதுரையில் நேற்று அளித்த பேட்டி:  கடந்த 2 மாதங்களில் வெளிநாடுகளில் 32 தமிழர்கள் இறந்துள்ளனர். இதில் 30 பேரின் உடல்கள் தமிழகம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்காக புதிய வீடுகள் கட்டி தரப்படும். தமிழகத்தில் 13,553 அகதிகள் குடும்பங்கள் முகாம்களுக்கு வெளியே வசித்து வருகின்றன. தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என ஒன்றிய அரசை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு சட்ட ரீதியாக இந்திய குடியுரிமை பெற்று தர தமிழக அரசின் சார்பில் சிறப்புக்குழு அமைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>