அமமுக நாராயணன் திமுகவில் இணைந்தார்

சென்னை: அமமுக அம்மா பேரவை இணைச் செயலாளரும், செய்தி தொடர்பாளர் மற்றும் சுற்றுச்சூழல் தலைவருமான தாம்பரம் நாராயணன், அமமுக தலைமை நிர்வாகம் நிர்வாகிகளின் நம்பிக்கையை இழந்து விட்டதாக கூறி தனது ராஜினாமா கடிதத்தை தலைமைக்கு அனுப்பி வைத்தார். இந்த  நிலையில் தாம்பரம் நாராயணன் நேற்று ஊரகத் தொழில் துறை அமைச்சரும், காஞ்சிபுரம்வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான தா.மோ.அன்பரசன் முன்னிலையில் அமமுக முக்கிய நிர்வாகிகளுடன் திமுகவில் இணைந்தார். அவர்களுக்கு தா.மோ.அன்பரசன் சால்வை அணிவித்து வரவேற்றார்.

Related Stories: