கடைகளில் கொள்ளை

பெரம்பூர்: சென்னை புளியந்தோப்பு வஉசி நகர் 6வது தெருவை சேர்ந்தவர் அலெக்சாண்டர் (70). புளியந்தோப்பு, திருவிக நகர் மெயின் தெரு பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்த கடையின் அருகே டீக்கடை நடத்தி வரும் கோபி, என்பவர் நேற்று காலை 6 மணியளவில் கடையை திறக்க வந்தார். அப்போது, அலெக்சாண்டரின் பெட்டிக்கடை பூட்டு உடைக்கப்பட்டிந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே அவருக்கு தகவல் தெரிவித்தார். அதிர்ச்சியுடன் அவர், விரைந்து வந்து பார்த்தபோது, ரூ.5 ஆயிரம் மற்றும் பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது.

* புளியந்தோப்பு வீரா செட்டி தெரு பகுதியை சேர்ந்தவர் சிவராமன் (40). அதே பகுதியில் அடகு கடை நடத்தி வருகிறார். நேற்று காலைகடையை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தார். லாக்கர் பூட்டை உடைக்க முடியாததால் திருடாமல் சென்றுள்ளனர். இதனால் நகைகள் தப்பியது.

Related Stories:

>