×

திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறை இடையே கன்னியாகுமரி கடலில் ரூ.37 கோடியில் தொங்கு பாலம்: சுற்றுலா பயணிகள் வரவேற்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே 37 கோடி ரூபாயில் கடல் மீது தொங்கு பாலம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கன்னியாகுமரிக்கு ஆண்டுதோறும் 25 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்கள்கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை காண ஆர்வமாக செல்கின்றனர்.

படகு துறையில் இருந்து படகு மூலம் சுற்றுலா பயணிகள் முதலில் விவேகானந்தர் நினைவுமண்டபத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் பின்னர் அங்கு இருந்து அருகில் உள்ள 133 அடிஉயர திருவள்ளுவர் சிலைக்கு செல்கின்றனர்.  ஆனால் கடலில் அவ்வப்போது ஏற்படும் கடல் நீர் மட்டம் தாழ்வு மற்றும் கடல்சீற்றம் காரணமாக விவேகானந்தர் நினைவு செல்லும் சுற்றுலா பயணிகள், அங்கிருந்து திருவள்ளுவர் சிலைக்கு அழைத்து செல்லாமல் மீண்டும் கரைக்கு திரும்ப வர நடவடிக்கை எடுத்து வருவதாக பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.

இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். இதற்கு நிரந்தரத் தீர்வாக இந்த இரண்டு நினைவுகளை இணைத்து இணைப்பு பாலம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டு காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த இரண்டு மண்டபங்களுக்கு இடைப்பட்ட சுமார் 100 மீட்டர் தூரத்தை இணைக்கும் வகையில் தற்பொழுது இரும்பு பாலம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருநெல்வேலியில் நடந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் ஏ.வா. வேலு கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவுமண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைத்து 37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடல் மீது தொங்குபாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் இந்த அறிவிப்பு கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags : Thiruvallavur Statue ,Kanyagumari Sea ,Vivekonandar , Rs 37 crore suspension bridge between Kanyakumari sea between Thiruvalluvar statue and Vivekananda rock: Tourists welcome
× RELATED ஜெயக்குமார் தனசிங் மரணம் வேதனை அளிக்கிறது: கே.எஸ்.அழகிரி