×

மதம், தலைவர்கள் குறித்து அவதூறு பேசி கைதான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு 15 நாள நீதிமன்ற காவல்..!

பாளையங்கோட்டை: பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் அருமனை என்ற இடத்தில் சில தினத்துக்கு முன்பு, கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் இணைந்து நடத்திய நிகழ்ச்சி ஒன்றில், ஜனநாயக கிறிஸ்தவ பேரவை அமைப்பின் ஆலோசகரான கிறிஸ்தவ மத போதகர் ஜார்ஜ் பொன்னையா இந்து மத கடவுள்கள் குறித்தும், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் குறித்து விமர்சித்துப் பேசினார். இந்த நிலையில், இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆன நிலையில் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஜார்ஜ் பொன்னையாவை கைது செய்ய வேண்டும் என புகார்கள் எழுந்தது.

இதைத் தொடர்ந்து, பல பிரிவுகளின் கீழ் அருமனை காவல்நிலையத்தில் ஜார்ஜ் பொன்னையா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தலைமறைவான அவரை தேடினர். இன்று காலை மதுரை ஒத்தக்கடை அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீஸாரிடம் ஜார்ஜ் பொன்னையா சொகுசு காருடன் சிக்கினார். அவரை நாகர்கோவில் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில், சமூக அமைதியை குலைக்கும் விதமாக பேசியதாக கைதான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து குழித்துறை குற்றவியல் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை தொடர்ந்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட உள்ளார்.

Tags : George Bonnaia , George Ponnaya arrested for slandering religion and leaders
× RELATED DMK Vs ADMK Vs BJP மக்களவைத் தேர்தலில்...