நிர்வாண போஸ்: ஆசாமி கைது

திருவனந்தபுரம்: கேரளா, கண்ணூர் மாவட்டம், பரியாரம் பகுதியில் அரசு மருத்துவகல்லூரி உள்ளது. இங்கு பயிலும் மாணவிகள் கல்லூரியில் இருந்து சற்று தொலைவில் உள்ள விடுதியில் தங்கியுள்ளனர். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இந்த விடுதிக்கு முன்பு ஒரு நபர் மாணவிகள் முன் நிர்வாண போஸ் கொடுத்தார். இதுகுறித்து பரியாரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சுனில் என்பவரை கைது செய்தனர்.

Related Stories:

>