பள்ளி மாணவி பலாத்காரம்: உடற்கல்வி ஆசிரியர் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், வயநாடு அருகே கோடஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் மனீஷ்(41). உடற்கல்வி ஆசிரியர். இவர் தாமரைசேரி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பணிபுரிந்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் அந்த பள்ளியில் படிக்கும் 11ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தாமரைசேரி போலீசில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் மனீஷை கைது செய்தனர். இவர் இதற்கு முன்பு பணி செய்த பள்ளியிலும் மாணவி ஒருவரை பலாத்காரம் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: