×

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் போட்டி: இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி, மணிகா பத்ரா இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்..!

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் டேபிள் டென்னிஸில் இந்திய வீராங்கனை சுதித்ரா முகர்ஜி அடுத்த சுற்றுக்கு தகுதி ஏற்றுள்ளார். முதல் சுற்றில் ஸ்வீடன் வீராங்கனை லிண்டாவை 4-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தியுள்ளார். டேபிள் டென்னிஸில் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஏற்கனவே மனிகா பத்ரா அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக ரசிகர்கள் அனுமதியின்றி கடும் கட்டுப்பாடுகளுடன் இந்த போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒலிம்பிக் தொடரில் டேபிள் டென்னிஸ் பிரிவில் பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், இந்திய வீராங்கனைகள் மணிகா பத்ரா, சுதிர்தா முகர்ஜி ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். முன்னதாக டேபிள் டென்னிஸ் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா, கிரேட் பிரிட்டனின் டின்-டின் ஹோவை எதிர்கொண்டார்.

முதல் நான்கு கேம்ஸ்களையும் 11-7, 11-6, 12-10, 11-9 என கைப்பற்றி கிரேட் பிரிட்டன் வீராங்கனையை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். இதேபோல் டேபிள் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை சுதிர்தா முகர்ஜி, சுவீடனின் லின்டா பெர்ஜிஸ்டிரோமுவை 4-3 என்ற செட் கணக்கில் (11-5, 9-11, 13-11, 11-9, 3-11, 9-11, 5-11) வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

Tags : Tokyo Olympics ,India ,Sudirta Mukherjee ,Manika Bhadra , Tokyo Olympics table tennis tournament: India's Sudirta Mukherjee, Manika Bhadra advance to second round ..!
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...