ஜம்மு பகுதியில் மீண்டும் பறந்தது 2 ‘ட்ரோன்’ பாதுகாப்பு படை உஷார்

ஜம்மு: நேற்று ஜம்முவில் ஒரு ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், மேலும் 2 ட்ரோன்கள் பறந்ததாக பாதுகாப்பு படையினர் உறுதி செய்துள்ளனர். அதனால், அதனை சுட்டு வீழ்த்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். ஜம்மு மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் ஐந்து கிலோ வெடிபொருளை (ஐ.இ.டி) சுமந்து கொண்டு, நேற்று அதிகாலை பறந்த ட்ரோனை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். முதற்கட்ட விசாரணையின்படி, ட்ரோன் ஆறு சக்கர ஹெக்ஸா-எம்-காப்ட்டர் மற்றும் ஜிபிஎஸ் மற்றும் விமான கட்டுப்பாட்டு சாதனம் பொருத்தப்பட்டிருந்தது.

கத்துவாவில் கடந்த ஆண்டு சுடப்பட்ட ட்ரோன்களுக்கும், இந்த ட்ரோனுக்கும் நிறைய வேறுபாடு உள்ளதாக கூறப்படுகிறது. லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய தீவிரவாத இயக்கங்கள், வெடிப் பொருட்களுடன் கூடிய ட்ரோன்களை இந்தியா நோக்கி அனுப்புவதாகவும், அதன் உபகரணங்கள் சீனா, தைவான் மற்றும் ஹாங்காங்கில் தயாரிக்கப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில், நேற்று மாலை ஜம்மு பிரிவில் சந்தேகத்திற்கிடமான இரண்டு ட்ரோன்கள் பறந்ததை பாதுகாப்பு படையினர் உறுதி செய்துள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான முதல் ட்ரோன் ஜம்முவின் கலுச்சக் பகுதியிலும், இரண்டாவது ட்ரோன் கதுவா பகுதியிலும் கண்டறியப்பட்டது. பாதுகாப்பு படையினர் ட்ரோன் பறப்பதை உறுதி செய்ததால், அதனை சுட்டு வீழ்த்துவதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: