மேலச்சேரி பச்சையம்மன் கோயிலில் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு

செஞ்சி :  செஞ்சி அடுத்த மேலச்சேரி பச்சையம்மன் கோயிலில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். செஞ்சி அடுத்த மேலச்சேரி காட்டில் அமைந்துள்ளது பச்சையம்மன் கோயில். இக்கோயில் தமிழ்நாடு, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் குலதெய்வ கோயிலாகவும் இருந்து வருகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்து வருவது வழக்கம். இதேபோன்று நேற்று ஆடி வெள்ளிக்கிழமை என்பதால் தமிழ்நாட்டில் பல இடங்களில் இருந்தும் பெங்களூரில் இருந்தும் பொதுமக்கள் ஏராளமானோர் கோயிலுக்கு வந்து மொட்டை அடித்து பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>