×

தங்கத்தை நெருங்கும் சவுரவ் சவுத்ரி: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு தகுதி

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் சவுரவ் சவுத்ரி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். துப்பாக்கிச் சுடுதலில் 586 புள்ளிகளுடன் இந்திய வீரர் சவுரவ் சவுத்ரி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று 32-வது ஒலிம்பிக் போட்டியின் திறப்பு விழாவானது தொடங்கியது. துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

அதன்படி,டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற மகளிர் 10 மீ ஏர் ரைபிள் பிரிவின் இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் இளவேனில் வலரிவன் மற்றும் அபுர்வி சண்டேலா தகுதி பெறத் தவறிவிட்டனர். இந்நிலையில்,டோக்கியோ ஒலிம்பிக்கில் 10 மீ ஆண்கள் ஏர் பிஸ்டல் பிரிவில்,இந்தியாவின் சவுரப் சவுத்ரி மொத்தம் 586 மதிப்பெண்களைப் பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.மேலும்,சவுத்ரி முதலிடத்தைப் பிடித்துள்ளார். மற்றொரு வீரரான அபிஷேக் வர்மா 575 புள்ளிகள் பெற்று 17 வது இடம் பிடித்ததால்,போட்டியிலிருந்து வெளியேறினார்.

Tags : Saurav Chaudhary ,Tokyo Olympics , Saurav Chaudhary approaches gold: Men qualify for finals in 10m air pistol at Tokyo Olympics
× RELATED டோக்கியோவுக்கு டிக்கெட் போட்டாச்சு…ஜோகோவிச் உற்சாகம்