ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிமோனியா தடுப்பூசி முகாம்-மயிலாடுதுறை கலெக்டர் லலிதா துவக்கி வைத்தார்

மயிலாடுதுறை : மயிலாடுதுறையில் உள்ள நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நியூமோகோக்கல் கான்ஜீகேட் தடுப்பூசி (நிமோனியா தடுப்பூசி) முகாமினை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் லலிதா தொடங்கி வைத்தார்.பின்னர் அவர் தெரிவித்ததாவது:இத்திட்டத்தின்கீழ் குழந்தைகளுக்கு மூன்று தவணையாக 1 1/2 மாதம் , 3 1/ 2 மாதம் மற்றும் 9 மாதங்களில் தடுப்பூசி போடப்படும். இத்தடுப்பூசியானது நிமோனியா மற்றும் மூளைக்காய்ச்சல் நோயினை தடுக்கும். வருடத்திற்கு 1 வயதிற்குட்பட்ட 11,151 குழந்தைகளுக்கு இத்தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் 929 குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும்.

மேலும் இத்தடுப்பூசி மாவட்டத்திலுள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களிலும் இலவசமாக போடப்படும் என கலெக்டர் லலிதா தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சுகாதாரத்துறை இணை இயக்குநர் மரு.மகேந்திரன், மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத்துறை துணை இயக்குநர் மரு.பிரகாஷ், வட்டார மருத்துவ அலுவலர் மரு.சரத்சந்தர், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ரவிக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>