×

இமயமலைகளில் நிகழும் பருவ மாறுபாடுகளை ரேடார் கருவிகள் மூலம் கண்டறிய ஏதேனும் திட்டங்கள் உள்ளனவா? : திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் கேள்வி.

டெல்லி : திராவிட முன்னேற்றக் கழக அரக்கோணம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர், டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன் அவர்கள் நேற்று 23 ஜூலை 2021, மக்களவையில், இமயமலைகளில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் பருவ மாறுபாடுகளை கண்காணிக், போதுமான ரேடார் கருவிகள் பயன்படுத்த படுகின்றனவா? அதற்குரிய விவரங்களை தர இயலுமா? என்றும்  மாண்புமிகு ஒன்றிய புவி அறிவியல் இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அவர்களிடம், விரிவான கேள்வியை எழுப்பினார்.

மாண்புமிகு ஒன்றிய புவி அறிவியல் இணையமைச்சர்அவர்களின் பதில் பின்வருமாறு :-
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சோன் மார்க், மற்றும் ஸ்ரீநகர், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், அஸ்ஸாம், மேகாலாயா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் டாப்ளர் ரக பருவ ரேடார்கள் பருவநிலை மாறுபாடுகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது என்றும், இமாசல பிரதேசத்தில் ரேடார்களை நிறுவும் பணி வருகின்ற டிசம்பர், 2022குள் முடிவடையும் என்றும், உத்தரகாண்ட் மாநிலத்தில் மேலும் இரண்டு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ரேடார்களின் பணியும் வருகின்ற டிசம்பர் 2022குள் நிறைவடையும் என்றும், அரக்கோணம் தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர், டாக்டர்  எஸ். ஜெகத்ரட்சகன் அவர்கள், மக்களவையில், எழுத்து மூலம் எழுப்பிய கேள்விக்கு  மாண்புமிகு புவி அறிவியல்  இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அவர்கள் விரிவான பதிலை அளித்துள்ளார்.

Tags : Himalayas , இமயமலை
× RELATED சிவராத்திரி தரிசன தலங்கள்