ஜெ.ஜெ. என்று பெயர் வைக்கப்பட்ட பல்கலைக்கழகம் தேவையற்ற ஒன்று: சி.வி.சண்முகத்துக்கு அமைச்சர் பொன்முடி பதில்

விழுப்புரம்: விழுப்புரம் அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் பேசிய, சி.வி.சண்முகம், ஜெயலலிதா பல்கலைக்கழகம் மூடப்படும் என்ற அறிவிப்பை கண்டித்து வரும் 26ம் தேதி அதிமுக சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார். சி.வி.சண்முகத்தின் இந்த அறிவிப்புக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-  ஜெயலலிதா பல்கலைக்கழகம் என்று நாகப்பட்டினத்தில் மீனவளப் பல்கலைக்கழகம் ஏற்கனவே, செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

விழுப்புரத்தில் பெயருக்காக பல்கலைக்கழகம் ஆரம்பித்தார்கள். ஆரம்பிக்க கூட இல்லை, அறிவித்ததோடு நின்றுவிட்டது. இப்போது, மாணவர்கள், ஆசிரியர்களுக்கு மிகவும் பலன் அளிக்கக்கூடியது கல்லூரிகளை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு இணைத்ததுதான். எனவே, கடந்த ஆட்சியில் போகும் அவசரத்தில் பெயர் வைத்துவிட்டு சென்றார்கள். தேவையில்லாமல் பெயர் வைத்ததற்காக ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்க முடியுமா?. அதனால், ஜெ.ஜெ. என்று பெயர் வைக்கப்பட்ட பல்லைக்கழகம் தேவையற்ற ஒன்று.

Related Stories: