×

மகிளா விரைவு நீதிமன்றம் தீர்ப்பு இன்ஸ்பெக்டர், எஸ்எஸ்ஐக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

நாகை:  நாகை வடக்கு பால்பண்ணை சேரியை சேர்ந்தவர் சுரேஷ்(39). ஆட்டோ டிரைவரான இவர், கடந்த 31.12.2013ம் தேதி தனது ஆட்டோவை நாகூர் -வாஞ்சூர் மெயின் ரோட்டில் நிறுத்தி வைத்திருந்தார். அப்போது, ரோந்து வந்த நாகூர் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், வலிவலம் எஸ்.எஸ்.ஐ.ஜெயராமன் ஆகியோர் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தியதாக கூறி டிரைவரை நாகூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அங்கு போலீசார் தாக்கியதில் சுரேஷ் மயங்கி இறந்தார். இதுகுறித்து, நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு நாகை மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் நீதிபதி பன்னீர்செல்வம் நேற்று தீர்ப்பளிக்கையில்,  சுரேஷ் இறப்புக்கு காரணமான இருவருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

Tags : Mahila Speedy Court , Mahila Speedy Court, Inspector, SSI, Jailed
× RELATED மகிளா விரைவு நீதிமன்றம் தீர்ப்பு...