×
Saravana Stores

திருவண்ணாமலையில் தடையை மீறி கிரிவலம் செல்ல முயன்ற பக்தர்கள் தடுத்து நிறுத்தம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கம். அதையொட்டி, தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். ஆனால், கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 16 மாதமாக கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. அந்தவகையில், இந்த மாதம் (ஆடி) பவுர்ணமி திதி நேற்று காலை  10.38 மணி முதல் இன்று காலை 8.51மணிக்கு  வரையில் கிரிவலம்  செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதித்தது. முன்னெச்சரிக்கையாக கிரிவலப்பாதையில் பல்வேறு இடங்களில் தடுப்பு வேலிகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால், நேற்று காலையில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் செல்ல முயன்றனர். இதன்பின், தடையை மீறி கிரிவலம் செல்ல முயன்ற பக்தர்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.


Tags : Thiruvannamal ,Kirivalla , Thiruvannamalai, Kiriwalam, devotees
× RELATED திருவண்ணாமலையில் இன்று குபேர...