10, 12ம் வகுப்புக்கான ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி தேர்வு முடிவுகள் இன்று வௌியீடு

புதுடெல்லி: கொரோனா இரண்டாவது அலை அச்சுறுத்தல் காரணமாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள், பல்கலைக் கழகம், கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. சிபிஎஸ்இ தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. இதேபோல், கடந்த ஏப்ரலில் நடைபெற இருந்த 10ம் வகுப்பு (ஐசிஎஸ்இ), 12ம் வகுப்பு (ஐஎஸ்சி)  தேர்வுகளை சிஐஎஸ்சிஇ எனப்படும் இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் ரத்து செய்து உத்தரவிட்டது. அகமதிப்பீட்டு தேர்வுகளின் முடிவுகளை கணக்கில் கொண்டு தேர்வு முடிவுகள் தயாரிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து, இன்று 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதாக சிஐஎஸ்சிஇ அறிவித்துள்ளது. கவுன்சிலின் இணையதளம் மற்றும் எஸ்எம்எஸ் மூலமாக தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: