ஒன்றிய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

காஞ்சிபும்: காஞ்சிபுரத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரில் இந்திய ராணுவத்துக்கான ஆயுத தயாரிப்பு அரசு நிறுவனங்களை இந்திய அந்நிய கார்ப்பரேட் கம்பெனிக்கு தாரைவார்க்க கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. தொழிலாளர் முன்னேற்ற சங்க காஞ்சி மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார். தொமுச சங்க செயலாளர் சுந்தரவதனன், துணை செயலாளர் ரவி, ஐஎன்டியூசி தலைவர் ராமநீராளன், மூர்த்தி முத்துக்குமார், அரசு சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷமிட்டனர்.

Related Stories:

More
>