×

நீலமங்கலம் கிராமத்தில் 3 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் மீட்பு: அறிவிப்பு பலகை வைத்த அதிகாரிகள்

ஸ்ரீபெரும்புதூர்: நீலமங்கலம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 3 ஏக்கர் அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை, வருவாய் துறை அதிகாரிகள் மீட்டனர். அதனை ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்க பலகை வைத்தனர். குன்றத்தூர் தாலுகா, ஒரத்தூர் ஊராட்சி நீலமங்கலம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலம் உள்ளது.  இதை அதே பகுதியை சேர்ந்த  சிலர், அந்த நிலத்தை ஆக்கிரமித்து வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்வதாக  குன்றத்தூர் தாலுகா அலுவலகத்துக்கு  புகார் சென்றது. இந்த புகார் மனு, மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து கலெக்டர் ஆர்த்தியின் உத்ததரவுபடி, வருவாய் ஆய்வாளர் கருணாநிதி தலைமையில், வருவாய் துறை அதிகாரிகள் நேற்று நீலமங்கலம் கிராமத்துக்கு சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது, அப்பகுதியில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை சிலர் ஆக்கிரமித்து குடிசை வீடு கட்டியும், எல்லை கல் அமைத்திருப்பதையும் கண்டனர். இதை தொடர்ந்து, அங்கு போடப்பட்டு இருந்த எல்லை கல்லை அப்புறப்படுத்தி  அரசு நிலைத்தை வருவாய் துறை அதிகாரிகள்  மீட்டனர். இதன் மதிப்பு மொத்தம் ரூ.75 லட்சம் என கூறப்படுகிறது.  மேலும், தனிநபர்கள் யாரும்  மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்க, அப்பகுதியில்ா அறிவிப்பு பலகையை அதிகாரிகள் வைத்தனர்.

Tags : Neelamangalam , Sapphire, government alienated land, recovery, board, authorities
× RELATED தனியார் கூரியர் நிறுவனத்தில் ₹2 லட்சம் பணம் திருடிய ஊழியர் கைது