×

மகாராஷ்டிராவில் இருந்து 3,12,000 கோவிஷீல்டு சென்னை வந்தது

சென்னை: மகாராஷ்டிரா மாநிலம் புனேவிலிருந்து  விமானத்தில் 3,12,000 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் நேற்று மாலை சென்னை வந்தது.தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதையொட்டி, 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயமாக  தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. குறிப்பாக, 3வது அலையிலிருந்து தப்ப 2 டோஸ் தடுப்பூசிகளும் போட்டுக்கொள்வது அவசியம் என்று அரசு அறிவித்துள்ளது. தமிழகத்திற்கு சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி டோஸ், தடுப்பூசிகளை ஒன்றியஅரசு வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில், ஒன்றிய சுகாராத்துறை தமிழ்நாட்டிற்கு மேலும் 3,12,000  டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஒன்றிய மருத்துவக் கிடங்கிலிருந்து விடுவித்தது. அந்த 3,12,000 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் அடங்கிய 26 பார்சல்கள் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில், புனேவிலிருந்து நேற்று 3.30  மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தது. இதையடுத்து உடனடியாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தடுப்பூசி பார்சல்களை தமிழக அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இவை, தேனாம்பேட்டை, டிஎம்எஸ் அலுவலகம் கொண்டு செல்லப்பட்டது.

Tags : Govshield ,Chennai ,Maharashtra , From Maharashtra 3,12,000 Cow Shield came to Chennai
× RELATED தமிழகம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் விசிக 24 இடங்களில் போட்டி