×

பள்ளிப்பட்டு அருகே 25 லட்சம் ஆக்கிரமிப்பு நிலம் அதிரடியாக மீட்பு

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே 25 லட்சம் ஆக்கிரமிப்பு நிலத்தை வருவாய் துறையினர் அதிரடியாக மீட்டனர்.திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே கிருஷ்ணராஜகுப்பம் அருகில், அப்பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் நீர்நிலை புறம்போக்கு  நிலத்தை ஆக்கிரமித்து பயிர் சாகுபடி செய்வதாக வருவாய் துறைக்கு புகார் வந்தது. அதன்பேரில், வருவாய் துறையினர், அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது, 25 லட்சம் மதிப்பிலான இரண்டரை ஏக்கர் நீர்நிலை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்தது தெரிந்தது.

இதையடுத்து அந்த விவசாயிக்கு, வருவாய் துறை சார்பில், நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும், நீர்நிலை புறம்போக்கு நிலத்தை சுற்றி அமைக்கப்பட்டு இருந்த வேலியை பள்ளிப்பட்டு வட்டாட்சியர் கதிர்வேலு, வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் ஆகியோர் பொக்லைன் இயந்திரம் அகற்றினர்.



Tags : Pallipattu , 25 lakh occupied land near Pallipattu recovered in a hurry
× RELATED பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு பேரூராட்சியில் தண்ணீர் பந்தல் திறப்பு