பரிசு பொருள் என்ற பெயரில் ஜெர்மனியிலிருந்து வந்த 5 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பிடிபட்டன

மீனம்பாக்கம்: ஜெர்மனியிலிருந்து சென்னை பழைய விமான நிலையத்திற்கு வெளிநாட்டு சரக்கு விமானம் ஒன்று நேற்றுமுன்தினம் இரவு வந்தது. அதில் வந்த பார்சல்களை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் பரிசோதனை செய்தனர். அப்போது ஜெர்மனியிலிருந்து சென்னையில் உள்ள ஒரு முகவரிக்கு வந்த பார்சலில் பரிசுப்பொருட்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

சுங்கத்துறையினருக்கு அந்த பார்சல் மீது சந்தேகம் ஏற்பட்டது. அந்த பார்சலில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணை தொடர்பு கொண்டனர். போனை யாரும் எடுக்காததால் சென்னை முகவரிக்கு நேரில் சென்று விசாரித்தனர். வீடு பூட்டியிருந்தது. அங்கு இளைஞர்கள் சிலர் தங்கியிருப்பது தெரியவந்தது.சுங்கத்துறையினர் நேற்று காலை அந்த பார்சலை பிரித்து பார்த்து ஆய்வு செய்தனர். அதில் 100 போதை மாத்திரைகள் இருந்தன. அவை மிகவும் விலை உயர்ந்தவை. அதன் மதிப்பு ₹5 லட்சம்.

Related Stories: