×

பொதுமக்களுக்கு நேற்று மீண்டும் போடப்பட்டது கோவாக்சின் 2வது டோஸ் தடுப்பூசி

சென்னை: சென்னையில் கொரோனா தடுப்பூசி மற்ற நகரங்களை விட அதிகளவில் செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சியில் 28,90,251 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் தொகுப்பில் இருந்து போதிய அளவுக்கு தடுப்பூசி வழங்காததால் அவ்வப்போது தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தி வைக்கப்படுகிறது. மேலும் கோவாக்சின் தடுப்பூசியை விட கோவிஷீல்டு தடுப்பூசிகள் அவ்வப்போது வரும் பட்சத்தில் கடந்த ஒரு வாரமாக கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே பொதுமக்களுக்கு போடப்பட்டது.

கோவாக்சின் தடுப்பூசி இல்லாததால், கடந்த சில நாட்களாக நிறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் 69,970 டோஸ்கள் வந்ததையடுத்து மீண்டும் கோவாக்சின் தடுப்பூசி நேற்று முதல் செலுத்தப்பட்டது. கோவாக்சின் 2வது டோஸ் தடுப்பூசி மாநகராட்சியின் 45 மையங்களில் போடப்பட்டது. ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்தவர்களுக்கும், நேரடியாக முகாம்களுக்கு வருபவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. நேற்று ஒவ்வொரு மையங்களிலும் கோவாக்சின் 200 பேருக்கும், கோவிஷீல்டு 200 பேருக்கும் போடப்பட்டது. மேலும் 18 ஆயிரம் டோஸ்கள் மையங்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் குறைந்த அளவிலேயே ஒதுக்கீடு செய்யப்படுவதால் மையங்களுக்கும் குறைவாகவே வழங்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசிகள் வரும் பட்சத்தில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி சென்னையில் தடுப்பூசி போட தகுதியுள்ள அனைவருக்கும் போடும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Dose vaccine
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...