நீர்வழிக்கால்வாய்களில் நவீன இயந்திரங்களைக் கொண்டு 6,189 மெட்ரிக் டன் வண்டல்கள் ஆகாயத்தாமரைகள் அகற்றம்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் துறையின் சார்பில் 48.80 கி.மீ. நீளமுள்ள 30 நீர்வழிக் கால்வாய்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியின் இயந்திரப் பொறியியல் துறையின் மூலம் வெளிநாடுகளிலிருந்து தருவிக்கப்பட்ட அதிநவீன இயந்திரங்களான நீர் மற்றும் நிலத்தில் இயங்கும் ஆம்பிபியன் இயந்திரங்கள் மற்றும் ரொபோடிக் எக்ஸவேட்டர் இயந்திரங்கள் ஆகியவற்றின் உதவியுடன் நீர்நிலைகளில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகள் மற்றும் வண்டல்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

பருவமழை காலத்திற்கு முன்னதாகவே சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் 30 நீர்வழிக் கால்வாய்களில் 2 நவீன ஆம்பிபியன், 3 சிறிய ஆம்பிபியன் மற்றும் 4 ரொபோடிக் எக்ஸவேட்டர் இயந்திரங்கள் கொண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் 6,189 மெட்ரிக் டன் வண்டல்கள் மற்றும் ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டுள்ளன. இவ்வாறு அகற்றப்பட்ட ஆகாயத்தாமரைகள் மற்றும் வண்டல்கள் டிப்பர் லாரிகள் மற்றும் ஜே.சி.பி. இயந்திரங்களின் உதவியுடன் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

Related Stories:

>