கோஹ்லியை சச்சினுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள்

லாகூர்: சிறந்த பேட்ஸ்மேன் யார் என்பதில் இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி, பாகிஸ்தான் கேப்டன்  பாபர் அசாம் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதுபற்றி பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் கூறியிருப்பதாவது: விராட் கோஹ்லி போல் சர்வதேச கிரிக்கெட்டில் பாபர் 20 ஆயி்ரம்  ரன்கள் எடுக்கட்டும். அதன்பின்னர் கோஹ்லியுடன் பாபர் அசாமை ஒப்பிடலாம். கோஹ்லியைப் போன்ற நீண்ட காலத்திற்கு தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும். பாகிஸ்தான் அணியில் வேகப்பந்துவீச்சாளர்கள் பற்றாக்குறை உள்ளது.

அதனை அதிகரிக்க வேண்டும், என்றார். மேலும் விராட் கோஹ்லியை டெண்டுல்கருடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள். டெண்டுல்கர், 150 கி.மீ.வேகத்தில் பந்துவீசும் பவுலர்களுக்கு எதிராக  நிறைய போட்டிகளில் ஆடி உள்ளார் . ஆனால் இப்போது எத்தனை பேர் 150 கி.மீ. வேகத்தில் பந்துவீசுகின்றனர், என அக்தர் சாடினார்.

Related Stories: